மீண்டும் சூடு பிடிக்கும் சூர்யா தனுஷ் மோதல்!இந்த வாட்டி பெருசா இருக்கும்போது!

மீண்டும் சூடு பிடிக்கும் சூர்யா தனுஷ் மோதல்!இந்த வாட்டி பெருசா இருக்கும்போது!

தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்து பல படங்களை இயக்க முடிவு செய்திருக்கின்றார். அந்த வகையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் தனுஷ் அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகின்றார்.

முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ஒரு ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வருகின்றது. அதைப்போல தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் பீல் குட் படமாக தயாராகி வருகின்றது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அநேகமாக இப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிகின்றது. அதே சமயம் இட்லி கடை படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்று தெரிகின்றது.

இந்நிலையில் தற்போது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இட்லி கடை திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனுஷ் மற்றும் சூர்யா நேரடியாக மோதும் வாய்ப்பு அமைந்துள்ளது. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்டு வருகின்றது.

கண்டிப்பாக இப்படம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. எனவே ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யா 44 வெளியாகும் நிலையில் சூர்யா மற்றும் தனுஷ் படங்கள் நேரடியாகம் மோதும் வாய்ப்பு அமையும். அவ்வாறு இரு நடிகர்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இட்லி கடை ஒரு பீல் குட் படம், அதே சமயம் சூர்யா 44 ஆக்ஷன் மற்றும் காதல் படம். எனவே இரு படங்களும் வெவ்வேறு ஜானரில் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக இரு படங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என தெரிகின்றது. இந்நிலையில் அடுத்தடுத்து தமிழில் மிகப்பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் இனி வரும் நாட்களில் கோலிவுட் மேலும் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.