Tissue கொடுக்கவில்லையாம் ரிசீட்டால் வாய் துடைத்து விட்டாராம் அர்சுணா பற்றி எரியும் இலங்கை பாராளுமன்றம்… இது எல்லாம் நாளை பாடப் புத்தகத்தில் வரும்

Tissue கொடுக்கவில்லையாம் ரிசீட்டால் வாய் துடைத்து விட்டாராம் அர்சுணா பற்றி எரியும் இலங்கை பாராளுமன்றம்… இது எல்லாம் நாளை பாடப் புத்தகத்தில் வரும்

முதலில் இது இலங்கை பாராளுமன்றில் நடந்ததே இல்லை… யாழ் வலம்புரியில் நடந்த விடையம் !

ஐயகோ இனி என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை ! உணவு சாப்பிட்ட பின்னர் வாய் துடைக்க டிசு பேப்பர் கொடுக்கவில்லை என்று, ரிசீட்டால் வாயை அர்ச்சுண துடைத்தார் என்று, ஒரு வீடியோவைப் போட்டு, அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள். அதாவது இந்த மாபெரும் சம்பவம் பாராளுமன்றத்தில் நடந்ததாம் . இதனை அனைத்து MPக்களும் பாலோ செய்யவேண்டும் என்று ஒரு தமிழன் எழுதுகிறான். இது ஒரு நல்ல படிப்பினை என்று மற்றவன் எழுதுகிறான் !

இது ஒரு முறைகேடு !, எப்படி பாராளுமன்ற உணவகத்தில் டிசூ பேப்பர் இல்லாமல் போகலாம் ? எனவே அர்ச்சுணா இதனை வெளியே கொண்டு வந்து விட்டார் என்று மற்றுமொருவன் எழுதுகிறான். அடே ஒரு உணவக்த்தில் டிசூ பேப்பர் முடிந்து விட்டது என்பது குற்றமாடா ? இல்லை அது முறைகேடா ? வாயை ரிசீட்டால் அர்ச்சுணா துடைத்தது போல எல்லா MPயும் செய்யவேண்டும் என்று மற்றவன் எழுதுறான். ஐயோ எங்கே போய் தலையை முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

நாட்டில் அரிசி முடிந்து விட்டது, சீனி சக்கரை இல்லை.. விலை வாசி உயர்வு, இப்படி ஆயிரக் கணக்கான மேட்டர் இருக்க, இவங்கள் அர்ச்சுணா செய்யும் , கோமாளித் தனத்தை பற்றிப் பேசுகிறார்கள். காலக் கொடுமை இது. இதுக்கு 2.4M மில்லியன் பார்வையாளர்கள், 5K காமென்ஸ் வேற. இலங்கை அரசியல் அதுவும் தமிழர் அரசியல் எங்கே போகிறது என்பது தெரியவில்லை.