முதலில் போதைப் பொருட்களில் கை வைக்கும் அனுரா .. 344K கிலேவை மாலை தீவு கடலில் வைத்து

முதலில் போதைப் பொருட்களில் கை வைக்கும் அனுரா .. 344K கிலேவை மாலை தீவு கடலில் வைத்து

இலங்கை மீனவருக்குச் சொந்தமான படகு ஒன்றை, சோதனை செய்யுமாறு இலங்கை கடல்படையினர் மாலை தீவு நாட்டின் கடல்படைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதனை அடுத்து மாலை தீவு கடல் பகுதியில் நின்றுகொண்டு இருந்த இந்தப் படகை கடல்படை சுற்றிவளைத்தது. இதில் இருந்து 344Kக் கிலோ ஐஸ் என்னும் போதைப்பொருளையும் , 124K கிலோ கொக்கேய்னையும் கடல்படையினர் கைப்பற்றி உள்ளார்கள்.

இவை அனைத்தையும் இலங்கைக்குள் களவாக கொண்டுவர, இந்தப் படகில் இருந்தவர்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இது போக இந்தப் படகு இலங்கைக்கு உள்ளே வரும்போது சில கடல்படையினர் பெரும் தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு இதனை சோதனை இன்றி அனுமதிப்பது வழக்கம். ஆனால் தற்போது உள்ள அரசானது லஞ்சத்தை ஒழிப்பது மட்டுமல்லாது. நாட்டைல் போதைப் பொருட்களையும் ஒழிக்கவேண்டும் என்ற, திட்டத்தையும் நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது.