பிரேசில் உச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தது. இதில்ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். நீதிமன்ற அமர்வுகள் முடிந்ததும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினார்கள்.
இந்நிலையில் இரவு 7.30மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தது. முதலில் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காரில் குண்டு வெடித்தது.
அதன் பின்னர் மனிதவெடிகுண்டு நபர் உச்சநீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அந்த நபர் குண்டுகளை வெடிக்க செய்ததாக தெரிகிறது. இதில் அந்த நபர் உடல் சிதறி பலியானார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.