நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், 141 இடங்களை JVP கட்சி கைப்பற்றியுள்ளது. இதனால் 18 தேசிய பட்டியல் ஆசனங்களை அவர்கள் பெற்று, மொத்தமாக 159 ஆசனங்களைப் பெற்றுள்ளார்கள். இதேவேளை சஜித் கட்சி 40 இடங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 8 இடங்களைப் பெற்று 3வது பெரிய கட்சியாக உள்ளது.
இலங்கை பாராளுமன்றில் 3ல் இரண்டு பெரும்பாண்மைக்கு மேல் தற்போது JVPக்கு கிடைத்துள்ளது. இதில் இந்தக் கட்சியின் தலைவர்கள், வட கிழக்கில் தாம் பெற்ற வெற்றியை பெரிதாகப் பார்கிறார்கள். ஒட்டுமொத்த இலங்கையும் JVP கட்சிக்கு வாக்கு போட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் JVP கட்சியை புறக்கணித்து, தமிழரசுக் கட்சிக்கு வாக்கைப் போட்டுள்ளது.