இலங்கையில் உள்ள லட்சக் கணக்கான ரஷ்யர்கள் இஸ்ரேலியர்களுக்கு என்ன ஆகும் ? அனுரா ஆட்சி …

இலங்கையில் உள்ள லட்சக் கணக்கான ரஷ்யர்கள் இஸ்ரேலியர்களுக்கு என்ன ஆகும் ? அனுரா ஆட்சி …

தமது நாட்டில் நடக்கும் போர் காரணமாக, பாதுகாப்பு அற்ற நிலை உள்ளதால் செல்வந்தர்கள் மற்றும் நடுத்தர மக்கள் பலர் இலங்கையில் வந்து வருடக் கணக்கில் தங்கி உள்ளார்கள். இதில் ரஷ்யர்கள், இஸ்ரேலியர்கள், உக்ரைன் நாட்டு மக்கள் அடங்குகிறார்கள்.

இவர்கள் இலங்கையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தங்கி உள்ள நிலையில், குறித்த நாட்டில் இருந்து விசேட விமானங்கள் சென்று வருகிறது. அதிலும் குறிப்பாக ரஷ்யா தனது விமான சேவையை இலங்கைக்கு விஸ்தரித்துள்ளது. இதன் ஊடாக பல மில்லியன் டாலர்கள் இலங்கைக்கு வருமானமாகக் கிடைக்கிறது.

இதனை ரணில் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. தற்போது இலங்கையில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், காலவரையின்றி தங்கியுள்ளார்கள். இதனை புது அரசாங்கம் எப்படி கையாழும் என்பது தெரியவில்லை. ஆட்சி மாற்றம் இடம்பெற்றதால், இந்த வெளிநாட்டவர்கள் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.