இலங்கையில் புதிய அரசு உருவாகியுள்ளதை அடுத்து, நாட்டைக் கட்டியெழுப்ப 200மில்லியன் டார்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. அனுராவுடன் அதன் முகாமையாளர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பேச்சு நடத்தி இருந்தார்கள். இன் நிலையில் நேற்றைய தினம்(19) இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச தரத்தில் சற்று மேலே சென்றுள்ளது. 1 அமெரிக்க டாலர் 300ரூபாவாக இருந்த நிலையில். அது தற்போது 290 ரூபாவாக குறைவடைந்துள்ளது. குறித்த 200 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் சீரான வழியில் அபிவிருத்திக்கு பயன்படுத்தினால். மேலதிகமாக 325 மில்லியன் டாலர்களை ஆசிய வங்கி கொடுக்கும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.