அணு குண்டு வெடித்தால் தாக்குப் பிடிக்க கூடிய, மற்றும் கதிரியக்க துகள்களால் தாக்க முடியாத மற்றும் கொண்டு செல்லக் கூடிய பங்கர்களை ரஷ்யா திடீரென தயாரிக்க ஆரம்பித்துள்ள விடையம் உலகை உலுக்கியுள்ளது. குறித்த பங்கர்களை ரஷ்யா தாயாரிப்பது மிகவும், ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கே வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது உக்ரைன் மீது ரஷ்யா அணு குண்டை ஏவினால், அது 3ம் உலகப் போராக மாறும். இதனை அடுத்து நேட்டோ நடுகள் நிச்சயம் ரஷ்யாவை தாக்கும். இதனால் ரஷ்யா தனது அணுகுண்டை ஐரோப்பிய நாடுகள் மீது ஏவினால், பதிலுக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ரஷ்யா மீது அணு குண்டு மழையை பொழியும். இதில் இருந்து முக்கிய நபர்களை காப்பாற்றவே ஆயிரக் கணக்கில் இந்த பங்கர்களை ரஷ்யா தற்போது தயாரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் , ரஷ்யா தனது அணு ஆயுதத்தை பாவிக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது. அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.