உக்ரைன் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா கொடுத்த, தொலை தூர ஏவுகணைகளை 18ம் திகதி தொடக்கம் பாவிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ரஷ்ய நகரங்களில் வசிக்கும் பல லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். ரஷ்யாவுக்குள் ஊருவிச் சென்று, பல மைல் தொலைவில் உள்ள ரஷ்ய இலக்கை அது தாக்கி அழிக்க வல்லவை. இதனால் ரஷ்யா கடும் கோபம் அடைந்துள்ள நிலையில். அணு ஆயுதத்தை ஏவும், கடைப்பாட்டில் அதிபர் புட்டின் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். இதனூடாக இலகுவாக ஒரு நாட்டை நோக்கி ரஷ்யாவால் தற்போது அணு ஆயுதத்தை ஏவ முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
முன்னர் அணு ஆயுதத்தை ஏவ வேண்டும் என்றால், பெரும் கடைப்பாடுகள் இருந்தது. ராணுவத் தளபதிக்கு அறிவிப்பது முதல்கொண்டு பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்வரை பெறவேண்டும். ஆனால் தற்போது போர் கால நடைமுறையை அதிபர் புட்டின் கொண்டுவந்துள்ளதால், அதிபரின் கட்டளை ஒன்றுமட்டுமே போதுமானது. உடனே கட்டளையை ஏற்று, அணு குண்டை ராணுவம் ஏவும். இதேவேளை ரஷ்ய தேசிய தொலைக்காட்சியின், மிக முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளரான, வல்டிமிர் குரோநிலோவ், ரஷ்ய அணு குண்டுகள் லண்டனில் உள்ள ரவல்கர் சதுக்கத்தை என்நேரமானாலும் தாக்கி அழிக்கும் என்றும். மிகவும் அற்புதமான கதிரியக்க கடல் அலையில், லண்டன் தாண்டு போகும் என்று, வர்ணித்துப் பேசியுள்ளார். இவர் வர்ணித்தது என்னவென்றால் லட்சக் கணக்கில் லண்டன் மக்கள் எப்படிச் சாகப் போகிறார்கள் என்பது பற்றித்தான்.
அந்த அளவு ரஷ்யா பிரித்தானியா மீது கடும் கோபத்தில் உள்ளது. பிரித்தானியா கொடுத்த கவச வண்டிகள் , மற்றும் அதி நவீன ஆயுதங்கள் ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என்பதே உண்மை நிலை ஆகும். அதனால் தான் அமெரிக்காவை விட பிரித்தானியா மீது ரஷ்யா அதிக கோபத்தில் உள்ளது.