மாஸ்கோ: ரஷ்யா தனது நவீன ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்ய முடிவு செய்துள்ளது. தனியாக சோதனை செய்வதற்கு பதிலாக போரில் ஒரு பகுதியாக சோதிக்கும் என்றும் அறிவித்து உள்ளது.
இந்த சோதனைகளை மேற்கொள்ள தங்களிடம் போதுமான நவீன ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை கையிருப்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளார். இது ரஷ்யாவின் நவீன ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்ல கூடிய ஏவுகணை ஆகும். நாங்கள் இது நிறைய முறை சோதனை செய்ய போகிறோம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே உக்ரைனில் இந்த ஏவுகணையை ரஷ்யா ஏவி சோதனை செய்துள்ளது. மீண்டும் பல முறை இதை ஏவி சோதனை செய்ய போவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இது ஒலியின் வேகத்தை விட 13 மடங்கு அதிக வேகத்தில் செல்ல கூடியது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு ஆயுதமாகும், இது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு வேகத்தில் செல்லும். இல்லையென்றால் 1 to 5 மைல்கல் நொடிக்கு போகக்கூடிய (1.6 to 8.0 km/s) வேகத்தில் செல்லும். இதன் வேகத்தை மேக் 5 என்றும் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை: ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் அணு குண்டை வைத்து ஏவலாம். இல்லையென்றால் அணுகுண்டு இல்லாமல் ஏவ முடியும். இதை போர்க்கப்பலில் இருந்தும் கூட ஏவ முடியும். பொதுவாக இந்த ஏவுகணையை ஒரு நாடு பெரிய போரில் மட்டுமே பயன்படுத்தும். அல்லது பெரிய சோதனைகளை செய்தால் பயன்படுத்தும். அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இது போன்ற கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தும்.
இப்படிப்பட்ட ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும்
முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கூடாது என்ற விதியை வைத்து உள்ளது ரஷ்யா. ஆனால் இந்த விதியை ரஷ்யா தற்போது அதிபர் புடின் உத்தரவின் பெயரில் மாற்றி உள்ளது. அதன்படி அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.