புதிய ஏவுகணைகளின் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி சோதனை செய்த ரஷ்யா!

புதிய ஏவுகணைகளின் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி சோதனை செய்த ரஷ்யா!

புதிய ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைனில் தாக்குதல் நடத்தி சோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் புதின் உறுதி செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், புதிய ஏவுகணைகளுக்கு ஒரிஷ்னிக் (oreshnik) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை தந்து உதவும் மேற்கு நாடுகளை தாக்க ரஷ்யாவுக்கு தார்மீக உரிமை உள்ளதாகக் கூறிய அவர், அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளால் ரஷ்யாவின் ஏவுகணைகளை இடைமறிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

ரஷ்யா எதற்கும் தயார் என்றும், உலகளாவிய மோதலை உருவாக்க அமெரிக்காவே முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். எந்த நாட்டு ஆயுதம் எங்களை தாக்குகிறதோ அவர்களுக்கும் பதிலடி தரப்படும் என்றும் அமெரிக்காவை புடின் எச்சரித்தார். உக்ரைனின் Dnipro நகரில் அந்நாட்டு ராணுவ தளத்தை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்தது.