உக்ரைன் போரில் பொய்யான ரிப்போர்ட்.. கண்கள் சிவந்த ரஷ்ய அதிபர் புதின்! தூக்கியடிக்கப்பட்ட ராணுவ ஜெனரல்

உக்ரைன் போரில் பொய்யான ரிப்போர்ட்.. கண்கள் சிவந்த ரஷ்ய அதிபர் புதின்! தூக்கியடிக்கப்பட்ட ராணுவ ஜெனரல்

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இந்தச் சூழலில் தான் ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் முக்கியமான சீனியர் ஜெனரல் ஒருவரை நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாகப் பொய்யான தகவல்களை அளித்ததாலேயே அவரை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நீட்டித்து வருகிறது. இடையில் சில காலம் ரஷ்யா உக்ரைன் போரில் எதுவும் நடக்காமல் அமைதியாக இருந்தது.

பதற்றம்: அதேநேரம் கடந்த சில வாரங்களில் அங்கு நிலைமை மொத்தமாக மாறியது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யாவுக்கு அனுமதி அளித்தன. அந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமானது.

இதற்கிடையே இப்போது இதனால் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ரஷ்யா உக்ரைன் போரில் மோசமாகச் செயல்படும் தளபதிகளை அதிரடியாக நீக்கியுள்ளாராம். சில சீனியர் ஜெனரல்கள் மீதும் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பாகத் தவறான தகவல்களைக் கொடுத்ததற்காக மூத்த ஜெனரல் ஒருவரையும் கூட ரஷ்யா நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்யா: அதாவது, உக்ரைனில் இன்னும் சில மாதங்களில் குளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. குளிர் காலம் வந்துவிட்டால் பெரியளவில் சண்டையிட முடியாது. இதனால் அதற்கு முன்னதாகவே முடிந்தவரை உக்ரைனுக்குள் ஊடுருவ ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப வேகமாக முன்னேறியும் வருகிறது. 2022ம் ஆண்டு இந்த போர் தொடங்கிய நிலையில், அப்போது முதல் இல்லாத அளவுக்கு மிக வேகமாக உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. அதேநேரம் டோனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியான சிவர்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் மிகக் குறைவாகவே இருந்தது.

நீக்கம்: இந்தச் சூழலில் தான் குறிப்பிட்ட சிவர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவத்தை வழிநடத்திய தெற்கு குழுமத்தின் தளபதியான கர்னல் ஜெனரல் ஜெனடி அனாஷ்கின் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவர்ஸ்க் பகுதியில் ராணுவத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அங்குத் தலைமை சரி இல்லை என்று புகார் வந்த நிலையில், அங்கு ஜெனராக இருந்தவர் நீக்கப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் ரஷ்யா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இது தொடர்பாக ரஷ்யா ஆதரவாளர்கள் சிலர் சர்வதேச ஊடகங்களில், “அந்த பிராந்தியத்தில் பிரச்சினை இருந்தது. அதைத் தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்தோம். அதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய 2 மாதங்கள் ஆகியுள்ளது. செவர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள போர் சூழல் குறித்து தவறான தகவல்களை ரிப்போர்ட் செய்து வந்ததால் அனாஷ்கினை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளது” என்று கூறினார்.

ரஷ்யா உக்ரைன் போர் வரும் காலங்களில் மேலும் மோசமானதாக மாறும் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் ரஷ்ய ராணுவம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.