மியன்மார் ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருந்த 08 பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட குழுவொன்று இன்று (16) இலங்கை வந்தடைந்துள்ளது.
இன்று பிற்பகல் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த இலங்கை விமானம் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 14 பேர் கொண்ட மற்றுமொரு குழு மியான்மாரில் ஆட்கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அண்மையில் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்திருந்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், மியான்மாரில் ஆட்கடத்தல் முகாம்களில் சிக்கியிருந்த 63 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தலுக்கு ஆளாகாமல் இருக்க அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளிநாட்டில் தொழில்வாய்ப்புக்களை எதிர்ப்பார்த்துள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.