அதிபர் புட்டின் ரகசிய ராணுவ தளத்தில் பெரும் வெடிப்பு : இரவு என்ன நடந்தது என்று தெரியவில்லை !

அதிபர் புட்டின் ரகசிய ராணுவ தளத்தில் பெரும் வெடிப்பு : இரவு என்ன நடந்தது என்று தெரியவில்லை !

ரஷ்யாவின் எல்லைகளில் ஒன்றான, ஆட்டிக் குளிர் பிரதேசத்தில், ராணுவத் தளம் ஒன்று உள்ளது. இது மிகவும் ரகசியமான ராணுவத் தளம் ஒன்றாகும். ரஷ்ய அதிபர் புட்டின், இந்த தளத்திற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இன் நிலையில் இன்று அதிகாலை அங்கே பெரும் வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அது மட்டும் அல்ல, ஒரு கடையில் இருந்த CCTV கமராவில் இந்த பெரும் வெடிப்பு, பதிவாகியும் உள்ளது.

உக்ரைன் தாக்குதலில் இந்த தளத்தில் வெடிப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இருந்த போதும் உக்ரைன் எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.