தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் ஆண்டனி நடிக்க வருவதற்கு முன்னர் இசையமைப்பாளராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதலில் திரைப்படங்களில் இசையமைத்து வந்த அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
2005 இசையமைப்பாளராக அறிமுகமான இவர் பல்வேறு விருத்திகளை பெற்று சிறந்த இசையமைப்பாளராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இசையை தாண்டி நடிப்பிலும் கவனத்தை செலுத்தி வந்த விஜய் ஆண்டனி நான், சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் ஆண்டனி லெவலே வேறு என்ற அளவுக்கு மாறிவிட்டது என்று சொல்லலாம்.
அவர் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராக மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். கடந்த ஆண்டு தான் விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சல் காரணமாக மகள் இறந்ததை எண்ணி விஜய் ஆண்டனி மிகுந்த மன வேதனை அடைந்தாலும் அடுத்த நாளே தனது வேலைகளை துவங்கியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
அன்பு மகளின் மரணத்திற்கு பின்பும் அந்த வலிகளில் இருந்து வெளியில் வந்த விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது மோட்டிவேஷன் அவரது நல்ல குணம் அவரது திறமையான மற்றும் வலிகளை தாங்கும் இதயத்தை கொண்ட அவரின் எண்ணங்கள் மக்களுக்கு பலரும் பிடித்திருந்தது.
தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே கச்சேரிகளிலும் இசையமைப்பாளராகவும் பாடல் பாடல்களிலும் வருகிறார். இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.ஏனெனில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது அவரை நேர்காணல் செய்த பிரபல தொகுப்பாளினி மணிமேகலை விஜய் ஆண்டனி பார்த்து கலங்கி அழுத்துவிட்டார்.
அதற்கான காரணத்தை கூறிய மணிமேகலை, எனக்கு மாதத்திற்கு முன் காலில் சிறிய அடிபட்ட போது அப்பவே நடக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் பட்ட வேதனை சொல்ல முடியாது. அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது உங்களது வீடியோ மற்றும் உங்களது மோட்டிவேஷனல் ஸ்பீச் தான். உங்களை பார்த்து நான் வியந்து விட்டேன். இப்போது நான் இங்கு இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் சார் என்று கதறி அழுதார் மணிமேகலை.
உடனே மணிமேகலையின் கையை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறிய விஜய் ஆண்டனி பல விஷயத்தை தாண்டி நம்முடைய வாழ்க்கை பயணம் என்பது கொசு விட ரொம்ப சின்னது. ஒரு சின்ன புள்ளிதான் நம்மளோட வாழ்க்கை. நம்முடைய கண்ணுக்கு இதுதான் உலகமே என்று பார்க்காமல், இந்த உலகத்தில் ஒரு சிறு பகுதிதான் நம் வாழ்க்கை என நினைத்தாலே உங்களுடைய பிரச்சனை மிகவும் சிறியதாக தெரியும். உங்களை விட உங்களுக்கு உங்களது கவலைகள் பிரச்சனைகள் எல்லாம் மிகவும் சிறிதாக தெரியும் என்றார். நமக்கான நேரத்தை நாம் ஒதுக்கினாலே நாம் சிறந்த முறையில் வாழ்க்கையை வாழலாம் என்றார் விஜய் ஆண்டனி.