தமிழ் சினிமாவில் 80 களின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர்,
70 களில் ஒப்பனைக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின்னர், நடிகர் விணுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தில் சிலுக்கு என்ற கேரக்டரில் அறிமுகம் செய்தார்.
அதன்புன்னர், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, ரங்கா, மூன்று முகம், பாயும் புலி, கைதி என ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
சினிமாவில் பிரபலமான் இருந்த அவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 35வயதில் உயிரிழந்தார்.