பீல்டு அவுட் ஆன என்ன? அந்த தொழில் செய்து கோடி கணக்கில் சொத்து சேர்த்த சிம்ரன்!

பீல்டு அவுட் ஆன என்ன? அந்த தொழில் செய்து கோடி கணக்கில் சொத்து சேர்த்த சிம்ரன்!

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக சினிமாவில் அறிமுகம் ஆகி தனது நடனத்தால் 90ஸ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சிம்ரன். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனாலும் இங்கு தொடர் வெற்றியால் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார்.

ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சிம்ரன். தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினால், வாலி, ஜோடி, பிரியமானவளே இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பை தாண்டி இவரது நடனமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பின்னர் வயதானதால் மார்க்கெட் குறைய திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். அதன் பின்னர் சினிமா பக்கமே தலைக்காட்டாத சிம்ரன் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் சிம்ரனின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

மொத்த சொத்து ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்குமாம். ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் சிம்ரன் சினிமாவை தாண்டி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையும் “கோட்கா பை சிம்ரன் “எனும் ஹோட்டல் ஒன்றை நடத்தி அதன் மூலம் லட்ச கணக்கில் லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.