லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் தற்போது புதுவகையான கமரா ஒன்றை வீதிகளில் களம் இறக்கியுள்ளார்கள். இது அறிமுகமாகிய சில மணி நேரத்தில் தேடப்படும் 3 குற்றவாளிகளை இந்தக் கமரா கண்டு பிடித்து பொலிசாருக்கு அறிவிக்க. அவர்கள் 2 பேரை கைது செய்துள்ளார்கள். ஒருவர் தப்பியோடி விட்டார். facial recognition என்று சொல்லப்படும் இந்த கமராவை ஒரு வேனில் பொருத்தி ஆட்கள் அதிகம் நடமாடும் இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
அந்த வீதியில் வரும் அனைத்து பொது மக்களின் முகத்தையும் குறித்த கமரா ஸ்கேன் செய்கிறது. அத்தோடு படு வேகமாக இதனை ஆராந்து சில நொடிகளில் அவர் தேடப்படும் நபரா என்பதனை அறிவித்துவிடும். இதனால் வேனில் உள்ளே இருக்கும் பொலிசார் உடனே வெளியே சென்று அன் நபரை கைது செய்கிறார்கள். பிரித்தானியாவில் பொலிசாரால் சிலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பெயிலில், வெளியே செல்கிறார்கள். அவர்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.
ஆனால் இதுபோல பலர் பொலிசாருக்கு அல்வா கொடுத்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம். அத்தோடு அவர்கள் தமது வீட்டையும் மாற்றி விடுவார்கள். இவர்களை கைது செய்வது என்பது மிகவும் சவாலான விடையம். ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கமரா , மிக சக்த்திவாய்ந்தது என்று கூறப்படுகிறது.