பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான தீபிகா படுகோன் கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அங்கு நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
முதலில் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு சினிமா துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாருக்கும் தீபிகா படுகோன் “சிங்கம் அகையன்” திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறது. இதனால் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இது போன்ற படங்களில் நடிப்பது நியாயமா உடலுக்கு கேடு விளைவிக்காதா என ரசிகர்கள் அவரை அதிருப்தியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.