இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் நாட்டின் 13 தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவி பெரும் தாக்குதல் நடத்தியது. ஆனால் அதில் 90% சத விகிதமான ஏவுகணைகளை இஸ்ரேல், தாக்கி அழித்துவிட்டது. இதனை நன்றாக புரிந்துகொண்ட ஈரான், தன்னிடம் உள்ள பிரத்தியேக ஆயுதங்களை தற்போது காட்சிப்படுத்தி உள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை EMP என்று அழைக்கப்படும், மின் காந்த அலை ஆயுதங்கள் ஆகும் !
குறித்த மின் காந்த அலை ஆயுதங்களை ஏவினால், இவை வானத்தில் வெடித்துச் சிதறி மின் காந்த அலைகளை தோற்றுவிக்கும். அவை குறைந்த பட்சம் 100KM பரப்பளவில் உள்ள அனைத்து எலக்ராணிக் சாதனங்களையும் செயல் இழக்கச் செய்யும். இதனால் இஸ்ரேல் நாட்டின் பலம் என்று கூறப்படும் அயன் டோம்(இருப்பு வளையம்) இந்த பாதுகாப்பு தளம் செயல் இழக்கக் கூடும். அப்படி நடந்தால், ஈரான் ஏவும் அனைத்து ஏவுகணைகளும் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடிக்கும்.
மொத்தமாகச் சொல்லப் போனால், இஸ்ரேல் வான் பாதுகாப்புப் பிரிவே, பல மணி நேரங்களுக்கு செயல் இழந்து போகும் நிலை தோன்றலாம். இந்த மின் காந்த அலை ஆயுதங்கள் பல உலக நாடுகளிடம் இல்லை. இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிடமே இல்லை. அப்படி இருக்க இதனை ஈரான் எப்படி வைத்திருக்கிறது என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில். பல மாதங்களுக்கு முன்னரே இந்த வகையான ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அப்படிப் பார்த்தால்…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தும் என்று, முன்னரே ரஷ்ய KGB அறிந்துள்ள விடையம் மீடியாக்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றுவரை ரஷ்ய உளவு நிறுவனமான KGB மிகவும் திறன்வாய்ந்த ஒரு அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம். ஏன் எனில் பிரித்தானியாவில் கூட அவர்கள் ஊடுருவி, டபுள் ஏஜண்டாக மாறிய முன் நாள் KGB உறுப்பினரை, பொலோனியம் என்ற கதிரியக்க துகளைக் கொடுத்து, கொடுமையாக கொலை செய்தார்கள் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.