2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பைடன் போட்டியிட உள்ள நிலையில். களத்தில் முன் நாள் ஜனாதிபதி டொனால் ரம்பும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். கடந்த முறை நடைபெற்ற போட்டியில் வெறும் 2% சத விகிதத்தால் தான் பைடன் வெற்றிபெற்றார். அதுவும் மிக முக்கிய காரணம் அவருக்கு முன் நாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு கிட்டியதால் தான்.
ஓபாமா ஒவ்வொரு மாநிலமாகச் சென்று பைடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் காரணத்தால் தான் பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது பைடனின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில். இம்முறை ரம் – பைடன் மோதலில் ரம் வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் ரம் ரஷ்ய அதிபர் புட்டினின் மறைமுக நண்பர் என்பது சி.ஐ.ஏ அறிந்த விடையம். இதனால் அமெரிக்க உளவு நிறுவனமாக சி.ஐ.ஏ, ரம் மீது ஏதவது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்தி அவரை, குற்றவாளியாக்க முனைகிறது.
டொனால் ரம் ஆட்சியில் இருந்தவேளை, அவர் அரச பணத்தை எடுத்து பாலியல் தொழில் புரியும் பெண்ணுக்கு கொடுத்ததாக கூறி அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்கள். இது நிரூபனமானால் ரம்பால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த வழக்கு மான் ஹட்டன் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில். நேற்றைய தினம்(19) விசாரணை இடம்பெற்ற வேளை, 37 வயது நபர் ஒருவர் தன்னை தானே தீ யிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டொனால் ரம்புக்கு ஆதரவாக தீ யிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த விடையம் தற்போது அமெரிக்க மீடியாக்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.