கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மலையாள திரைப்பட நடிகையான மடோனா செபஸ்டின் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்து வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மிகப்பெரிய அளவில் அறிமுகத்தை கொடுத்தார்.
முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்து நல்ல அறிமுக படமாக பார்க்கப்பட்டது அதை தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளிலிருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து கவண் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுக்க மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். தொடர்ந்து ஜுங்கா என அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் படங்களிலே மடோனா செபஸ்டியன் நடித்து வந்தார்.
தற்போது தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் மடோனா செபஸ்டின் சமீபத்திய விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடல் பாடி அசத்தியிருக்கிறார். அவரின் குரலை கேட்டு விஜய் சேதுபதி மெய் சிலிர்த்துப் போய் விழிபிதுங்கி பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.