சமீப வருடங்களாக சூப்பர் ஸ்டார் வீட்டில் பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை என்ற வகையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் அவருக்கு மிகப்பெரும் தலைவலியும் மன உளைச்சலையும் கொடுத்து வருகிறது. ஆம், முன்னதாக தனது இளைய மகள் சௌந்தர்யா விவாகரத்து செய்துவிட்டு பின்னர் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனால் ரஜினிக்கு நிம்மதி இல்லாமல் இருந்தத.அதன் பின்னர் அவருக்கு மறுமணம் செய்து வந்து அழகு பார்த்தார். தற்போது அவருக்கு ஒரு மகனும் பிறந்து குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்த்துகிறார். அடுத்ததாக தற்போது மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் விவாகரத்து செய்ய முன் வந்துவிட்டார். இந்த பிரச்சனை ரஜினிக்கு மிகப்பெரிய இடியாக விழுந்துவிட்டது.
இப்படி குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சனை நடந்து வரும் நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகனான யாத்திரா பிளஸ் டூ+12 தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பின் பட்டியல் குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி வியப்பை அளித்துள்ளது. அதன்படி,
மொழிப்பாடம் – 98
ஆங்கிலம் – 92
கணிதம் – 99
இயற்பியல் – 91
வேதியல் – 92
உயிரியல் – 97
மொத்தம் – 569/600
விவாகரத்து பிரச்சனைக்கு நடுவிலும் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறார் என பலரும் அவரை பாராட்டியதோடு சூப்பர் ஸ்டாருக்கு பெருமை சேர்த்த யாத்ரா என அவருக்கு வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.