சமீப நாட்களாகவே இளையராஜா பல ஆண்டுகளாக தான் சேர்த்து வைத்த பெயரை கெடுத்துக் கொண்டு அவப்பெயரை சம்பாதித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் தான் மிகப்பெரிய ஆள், தன்னை தவிர இந்த உலகில் யாருமில்லை என்ற ஒரு தலைக்கணத்தில் ஆடி வருகிறார் என பல திரைப்படங்கள் வெளிப்படையாக பேட்டிகளில் கூட தெரிவித்திருக்கிறார்.
மேலும் மேடைகளில் பல நட்சத்திர பிரபலங்களை அவர் மிகவும் மோசமாக முகம் சுளிக்கும் வகையில் திட்டுவதெல்லாம் இணையத்தில் வெளியாகி அவர் மீதான ஒரு வெறுப்பை காக்க ஆரம்பித்தது இளையராஜாவின் பாடல்களை மட்டும் கேட்க முடியும். அவரது பேச்சை ஒரு நிமிடம் கூட கேட்க முடியாது என அவர் மீது மக்களும் வெறுப்பை கக்கி வந்தனர்.
இப்படியான சமயத்தில் மலையாளத்தில் அண்மையில் வெளியாகி சக்கை போட்டு போட்ட திரைப்படம் தான் “மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படத்தில் குணா படத்தின் “கண்மணி அன்போடு” பாடல் இடம் பெற்றிருந்தது. அந்த பாடலை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டதாக அதற்கு உரிய காப்புரிமை கொடுக்க வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து இளையராஜாவுக்கு பதில் கொடுத்துள்ள தயாரிப்பாளர், “இரண்டு நிறுவனங்களிடம் முறையாக அனுமதி வாங்கி தான் நாங்கள் உங்கள் பாடலை பயன்படுத்தினோம். தெலுங்கு நிறுவனத்திடமும் மற்ற மொழி நிறுவனத்திடம் இருந்து அனுமதி வாங்கினோம். பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிடமும் நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் இந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறோம். எனவே அவர் வழக்கு தொடர்ந்திருப்பது நியாயமே இல்லை எனக் கூறியிருக்கிறார்.