ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தாலும், முன்னேறி வரும் படைகளை மட்டும் தாக்கிக் கொண்டு வேறு எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையிலும் இதுவரை உக்ரைன் இறங்கவில்லை. உக்ரைன் தற்பாதுகாப்பு யுத்தத்தையே மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நேட்டோ நாடுகள் கேட்டுக் கொண்டது. ஆனால் தற்போது இந்த உத்தரவை நேட்டோ நாடுகள் சற்று தளர்த்தியுள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு உள்ளே உக்ரைன், மட்டுப் படுத்தப்பட்ட தாக்குதல் நடத்த முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
ஆளில்லா தாக்குதல் விமானங்களை தயாரிப்பதில், உக்ரைன் படு கில்லாடி. இவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஒன்று, பெரும் வெடிகுண்டு ஒன்றுடன் ரஷ்யாவுக்குள் நேற்று முன் தினம்(08) ஊடுருவியுள்ளது. ஆனால் ரஷ்ய ராடர் திரைகளில் இது சிக்கவில்லை. சுமார் 360KM தூரம் வரை பறந்துசென்று, ரஷ்ய விமானத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, SU-57 அதி நவீன போர் விமானம் மீது அது மோதி வெடித்துள்ளது. (இதற்கான ஆதார சாட்டலைட் புகைப்படத்தையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது).
இருப்பினும் ரஷ்ய அதிகாரிகள் இதனை முற்றாக மறுத்துள்ளார்கள். அணு குண்டை காவிச் செல்லும் இந்த அதி நவீன ரஷ்ய விமானம் 52 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது வானில் பறக்கும் வேளை, எவராலும் தாக்க முடியாது. ஆனால் தரையில் நின்றால், எவராலும் தாக்க முடியும். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, பொருளாதார ரீதியில் பெரும் அழிவை சந்தித்து வருகிறது.
Source ; https://osnews.co.uk/?p=357