மகளின் திருமணத்தை பார்த்து பார்த்து பிரம்மாண்டமா நடத்திய அர்ஜுன் – வீடியோ!

மகளின் திருமணத்தை பார்த்து பார்த்து பிரம்மாண்டமா நடத்திய அர்ஜுன் – வீடியோ!

நடிகர் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா – உமாபதி ராமைய்யாவின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வருகிறார். முதன் முதலில் யானை திரைப்படத்தில் நடித்து 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை அடுத்து பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா. பெற்றோர்கள் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதையடுத்து ஐஸ்வர்யா – உமாபதியின் திருமணம் அண்மையில் படு கோலாகலமாக நடந்துள்ளது. அவர்களின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. மகளின் திருமணத்தை பார்த்து பார்த்து பிரம்மாண்டமா நடத்தியுள்ளார் அர்ஜுன்.

இதோ அந்த வீடியோ: