ரஜினி பட நடிகைக்கு திருமணம்…. அப்பாவிடம் கூட சொல்லலயா?

ரஜினி பட நடிகைக்கு திருமணம்…. அப்பாவிடம் கூட சொல்லலயா?

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகை ஆன சோனாக்ஷி சின்ஹா ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இந்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் . இதனிடையே இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தற்போது 37 வயதாகும் நடிகை சோனாக்ஷிந்தா ஜாகீர் இஃபால் என்ற தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறாராம். அவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. Double XL என்ற படத்தில் ஒன்றாக நடித்த அவர்களாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் பற்றி பரவும் செய்திகளுக்கு பதில் அளித்த சோனாக்ஷி ‘அது உங்களுக்கு தேவை இல்லாதது’ என பதில் கொடுத்து இருக்கிறார். அவரது அப்பா எம்பி நடிகர் சத்ருஹன் சின்ஹாவை கேட்டால், “திருமணமா.. எனக்கு தெரியாது.. சோனாக்சி திருமணம் செய்தால் நான் ஆசிர்வதிப்பேன்” என கூறி இருக்கிறார்.அதனால் அப்பாவிடமே சொல்லாமல் சோனாக்ஷி திருமணம் செய்கிறாரா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.