நேற்றைய தினம் BBC TVயில் நடந்த நிகழ்வில், பிரதமர் ரிஷி மற்றும் எதிர்கட்சித் தலைவர் கியர் ஸ்டாமர் ஆகியோர் கலந்துகொண்டு நேரடி விவாதத்தில் ஈடுபட்டதோடு. மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்வு ஆரம்பமான கட்டம் முதலே, எதிர் கட்சி தலைவர் ரிஷி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். போகப் போக மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில்.
ரிஷி சுண்ணக்கின் பல திட்டங்களைப் பற்றி பேசிய கியர், இது மனிதாபிமானமற்ற செயல் என்று சாடினார். ரிஷி சுண்ணக்கின் ரிவாண்டா திட்டத்தை , கடுமையான எதிர்த்த கியர் அது தொடர்பாக பேசிய வேளை மக்கள் கை தட்டி வரவேற்றார்கள். இதனை அடுத்து மிகவும் கடுப்பான ரிஷி சுண்ணக், பதற்றத்தில் உளற ஆரம்பித்துவிட்டார். இதனை அடுத்து ரிஷி அவர்கள், சற்று கட்டுப்பாட்டை இழந்தார்.
மேலும் சொல்லப் போனால், ஒரு வகையில் மிகவும் தயாராக வந்த எதிர்கட்சித் தலைவர் கியர், அவர்கள் ரிஷியை கடித்து குதறிவிட்டார் என்று தான் கூறவேண்டும். TV நிகழ்வின் முடிவில் பலரும் கியர் பேசியதை ஆதரித்து சமூக வலையத் தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.