கடாபி தனது மகனை காப்பாற்ற பேசிய சாட்டலைட் Phone-Call ஒட்டுக்கேட்ட அமெரிக்கா செய்த வேலை இதுதான் !

கடாபி தனது மகனை காப்பாற்ற பேசிய சாட்டலைட் Phone-Call ஒட்டுக்கேட்ட அமெரிக்கா செய்த வேலை இதுதான் !

லிபிய நாட்டை ஆண்டு வந்த கடாபி பற்றி தெரியாதவர்கள் எவருமே இருக்க முடியாது. சுமார் 42 ஆண்டுகள் லிபியாவை அவர் ஆட்சி செய்து வந்தார். இதனால் அமெரிக்கா தொடக்கம் நேட்டே நாடுகள் அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். முடிந்தால் கொலை செய்வது என்பதே அமெரிக்காவின் ஒரே நோக்கமாக இருந்தது. கடாபிக்கு 9 பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களில் முக்கியமானவர் மூட்ட- சிம் கடாபி. இவர் லிபியாவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். தமது அழிவுகாலம் நெருங்கி விட்டதாக உணர்ந்த கடாபி, இறுதியில் அமெரிக்காவோடு சமரசமாக செல்ல திட்டம் தீட்டி, தனது மகனை அமெரிக்காவுக்கு அனுப்ப. மூட்ட சிம் கடாபி, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனை சந்தித்தார். லிபிய – அமெரிக்க உறவை பலப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

ஒரு புறத்தில் லிபிய அதிபர் கடாபியின் மகனை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள் மறுமுனையில் வேறு திட்டத்தில் இருந்தார்கள். லிபியாவில் ஒரு உள்ளூர் புரட்ச்சி ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா திரை மறைவில் பெரும் திட்டம் தீட்டி இருந்தது. இதனூடாக 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் அளவில், National Transitional Council (NTC) என்ற அமைப்பு அமெரிக்கா உதவியோடு உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு ஆயுதங்களை அமெரிக்கா அள்ளிக் கொடுக்க, அந்த அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக லிபிய நாட்டில் உள்ள பல நகரங்களை கைப்பற்ற ஆரம்பித்தது. இதனை அடுத்து பெரும் உள்நாட்டு யுத்தம் ஒன்று ஆரம்பமானது.

2011 ஆகஸ்ட் மாதம் லிபிய தலை நகர் திரிபோலி, இந்த NTC அமைப்பின் கைகளில் விழுந்தது. இதனை அடுத்து சுமார் 75 வாகனங்களில் தனக்கு ஆதரவான படைகளோடு புறப்பட்டுச் சென்று, கடாபி சேர்ட்டி என்னும் நகரில் பதுங்கி இருந்தார். இதேபோல அவரது மகனும் மேலும் சில வாகனத் தொடரணியில் வந்து, சேர்ட்டி நகரில் பதுங்கினார். அன் நகரையும் NTC படைகள் தாக்க ஆரம்பித்ததால், 20ம் திகதி அக்டோபர் 2011 அன்று காலை சுமார் 8.30 மணியளவில், 75 வாகனங்களில், கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் அந்த நகரை விட்டு வெளியேறிச் சென்றுகொண்டு இருந்தார்கள்.

இதற்கு சற்று முன்னதாக, கடாபி சாட்டலைட் டெலிபோனில் பேசி இருந்தார். ஒரு விமானத்தை தயார் செய்யுமாறு அவர் கூறியதை அமெரிக்க படைகள் ஒட்டுக் கேட்டு விட்டார்கள். இதனால் சேர்டி நகரில் இருந்து கடாபி தப்பிக்கிறார் என்ற சந்தேக அமெரிக்காவுக்கு எழுந்தது. இதனை அடுத்து அமெரிக்கா தனது ஆளில்லா விமானத்தை அந்தப் பகுதிக்கு அனுப்பி நோட்டம் இட்டது. இதேவேளை பிரித்தானிய ரெனேடோ விமானம் அந்தப் பகுதியை நோட்டமிட்டு, வாகனங்கள் செல்வதை உறுதிப்படுத்த. நேட்டோ படைகளின் விமானங்கள் 21 வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கடாபியின், 75 வாகனம் அடங்கிய தொடரணி, 2டாகப் பிரிந்தது.

இது இவ்வாறு இருக்க அமெரிக்காவின் ஆளில்லா விமானம்(Predator Drone), ஏவுகணைகளால் இந்த வாகன தொடரணியைத் தாக்க, போதாக் குறைக்கு பிரான்ஸ் நாட்டு விமானமும் தாக்க. கடாபியின் வாகனத் தொடரணி நிலை தடுமாறி குலைந்தது. பல வாகனங்களை குறி வைத்து தாக்கிய நேட்டோ படை அணி, அமெரிக்கா, மற்றும் பிரான்ஸ் விமானங்கள், கடைசி வரை கடாபியின் வாகனத்தையோ அல்லது அவரது மகனின் வாகனத்தையோ தாக்கி அழிக்கவில்லை. அவர்களுக்கு துல்லியமாகத் தெரியும், எந்த வாகனத்தில் முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது. இது ஏன் ? என்று நீங்கள் நினைக்கக் கூடும்.

கடாபியின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனம் தாக்கி அழிக்கப்பட்டதால், கடபியின் வாகனமும் சேதமாகி இருந்தது. மேலும் கடாபியின் மகன், தப்பிச் சென்று அருகே உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் அடைந்தார். அவரை சுற்றி வளைத்த NTC படைகள், அவரை இறுதியாக பிடித்தது 20ம் திகதி அக்டோபர் மாதம் 2011.  அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிளர்ச்சிப் படை, முதலில் அவரது தொண்டையில் சுட்டு பின்னர் மார்பில் மற்றும் வயிற்றில் சரமாரியாக சுட்டு அவரைக் கொலை செய்தார்கள். இது இவ்வாறு இருக்க, சிறிய எண்ணிக்கையில் தனக்கு விசுவாசமான படை ஒன்றோடு கடாபி, ஒரு சுரங்கத்தில் மறைந்து இருந்தார். அதனையும் சொல்லி வைத்தால் போல NTC படைகள் சுற்றி வளைக்கிறார்கள். அங்கு நடந்த சண்டையில் கடாபியின் காலில் சூடு பட்டு விட்டது. ஏற்கனவே அவர் காயப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட இருந்தார்.

இன் நிலையில் வெள்ளைக் கொடியை காட்டிக் கொண்டு, பதுங்கிய இடத்தில் இருந்து கடாபி மற்றும் அவரது பாதுகாப்பாளர்கள் சிலர் வெளியே வருகிறார்கள். அதன் பின்னர் நடந்ததை உலகமே YouTube ல் பார்த்தது. அவரை அடித்தே கொன்றார்கள். ஆனால் நீதி நியாயம் பற்றி வாய் கிழியப் பேசும், ஐ.நா சபை, கடாபியின் சாவை வேறு விதமாக பதிந்துள்ளது. அவர் தனது சொந்த பாதுகாப்பாளரால் சுடப்பட்டார் என்று கூறி அறிக்கை வெளியிட்டது. மேலும் அமெரிக்க சார்பு அமைப்புகள், கடாபியின் பாதுகாப்பாளர் எறிந்த கைக் குண்டு தவறி அந்த இடத்தில் விழுந்து வெடித்ததாக ஒரு தகவலை பதிவு செய்து உள்ளார்கள். அமினிஸ்ட்டி இன்டர் நெஷனல்(Amnesty international) மட்டும் இந்தப் படுகொலையை கண்டித்துள்ளார்கள். Youtube போன்ற சமூக வலையத் தளங்கள், கடாபி கொல்லப்பட்ட வீடியோக்களை அகற்றி, வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விட்டார்கள்.

தற்போது ஈழத் தமிழர்களின் வரலாற்றை எப்படி அழித்து வருகிறார்களோ… அப்படித் தான். கடாபி மரணத்தையும் மறைத்து விட்டார்கள்.. சாட்டலைட் போனை பாவித்தால் என்ன நடக்கும் என்று, விடுதலைப் புலிகள் அறிந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் இழந்த தலைவர்கள் பலர். NATO படையணி,  தான் எந்த ஒரு தாக்குதலையும் லிபியாவில் நடத்தவே இல்லை என்று அப்பட்டமாக பொய் உரைத்தது. நாங்கள் கடாபியை தாக்கவே இல்லை. நாங்கள் ராணுவ படையைத் தான் தாக்கினோம் என்றது அமெரிக்கா. அதாவது கடாபி NTCயின் கைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறக்க வேண்டும். அதற்கான எல்லா தாக்குதலையும் நடத்திய அமெரிக்கா, நாங்கள் கடாபியை கொல்ல வில்லை என்று கூறுகிறது. இது எப்படி இருக்கிறது ?

ஒரு பாம்பை பிடித்து அடி அடி என்று அடித்துவிட்டு, கடைசியாக கீரி பிள்ளையின் கையில் கொடுத்து விட்டு, எங்களுக்கும் பாம்புக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அல்லவா ? இது தான் GEO-பாலிட்டிக்ஸ்

அதிர்வுக்காக
கண்ணன்