பிரித்தானிய வரலாற்றிலேயே முதல் தடவையாக, 2 ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு, லேபர்(LABOUR) கட்ச்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் உமா குமாரன் அவர்கள், லண்டன் Stratfordல் போட்டியிடுகிறார். அந்த நகரிலே பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து வாக்குகளைப் போட்டாலே போதும். இலகுவாக உமா குமாரன் அவர்கள் வெற்றியடைவார். ஈழத் தமிழர்கள் தமது உரிமைகளை வென்று எடுக்க, பிரித்தானியாவில் லேபர் கட்சி, கான்சர் வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் கட்சியில் இணைந்து வேலை செய்கிறார்கள். அது அனைவரும் அறிந்த விடையம். ஆனால் இம் முறை எமது, ஈழத் தமிழ் பெண்கள் போட்டி இடுவதால், இவர்கள் கட்சி பேதங்களை மறந்து, தமிழ்ப் பெண்களுக்காக செயல்படுதல் நல்லது.
அதேபோலவே கிருஷ்னியும், லண்டன் சட்டன்(Sutton) பகுதியில் லேபர் கட்சி சார்பாக MP பதவிக்கு போட்டியிடுகிறார். சட்டன் பகுதியிலும் பல நூறு ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து கிருஷ்னிக்கு வாக்குகளைப் போடவேண்டும். கடந்த முறை போல, பிரித்தானிய தேர்தல் களம் நிச்சயம் இருக்காது. இம்முறை நடக்கவுள்ள தேர்தலில் லேபர் கட்சியே வெல்லும் என்பது மிகத் தெளிவாக கோடிட்டு காட்டப்படுகிறது. அந்த வகையில், இந்த 2 ஈழத் தமிழ்ப் பெண்களுக்கும் தமிழர்கள், சற்று உதவினால் போதும். இவர்கள் வெல்வது நிச்சயம்.
பிரித்தானிய பாராளுமன்றில் ஈழத் தமிழர்களின் குரல் ஒலிக்கும் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஜூலை மாதம் 4ம் திகதி வியாழக் கிழமை நடைபெறும் தேர்தலில் முழு அளவில் தமிழர்கள் பங்குபற்றி, தமது வாக்குகளைச் செலுத்தவேண்டும். லேபர் கட்சி தமிழர்களுக்கு 2 இடங்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் வெற்றியடைந்தால். மேலும் ரூட்டிங், வெம்பிளி, குரைடன் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் மேலும் பல இடங்களை லேபர் கட்சி அடுத்த தேர்தலில் ஒதுக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே தமிழர்களே தவறவிட வேண்டாம்.