காதலியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்

இந்த செய்தியை பகிருங்கள்

காதலியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் இந்த செயலை செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் நொச்சிப்பட்டியில் தனியார் கோழி பண்ணை இருக்கிறது. இந்த கோழி பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோமனுபோயன் (17), போதிமாண்டவி (16) என்கிற காதலர்கள் வேலை கேட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சிறுவர், சிறுமி என்பதால் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது கிடையாது என்று சொல்லி பண்ணையாளர் அவர்களுக்கு வேலை தர மறுத்திருக்கிறார்.

இதனால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சோமனுபோயன், போதிமாண்டவி இருவரும் நண்பரின் குடியிருப்பில் தங்கி இருந்திருக்கிறார்கள். நேற்று காலையில் சோமனுபோயன், தனது செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். வேறு ஒரு பெண்ணுடன் எதற்கு உனக்குபேச்சு என்று சொல்லி சண்டை போட்டு இருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சோமனு போயன், கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் அந்த சிறுமி உயிரிழந்திருக்கிறார். தகவல் அறிந்த மோகனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சோமனுபோயனை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us