நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பஜக, தோல்வியை தழுவியது. 40 தொகுதிகளில் எந்த ஒரு இடத்தையும் பஜகவால் கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் ஆளுனராக இருந்த தமிழ் இசை, அதனை ராஜினாமா செய்துவிட்டு MP தேர்தலில் போட்டியிட்டு அவரும் மண் கவ்வியுள்ளார். தற்போது தமிழ் இசைக்கும், அண்ணா மலைக்கும் ஒரு பனிப் போர் ஆரம்பித்துள்ளது. அண்ணமலை தமிழ் இசைக்கு ஆதரவாக இருக்கும், கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து தூக்கி வருகிறார்.
அவர்கள் செய்த சிறிய தவறுகளைக் காட்டி, அவர்களை தூக்கி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில் தமிழகத்தில் பஜக கட்சியில் உட்பூசல் வலுவடைந்துள்ளதை, பஜக வின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தெரிந்துகொண்டு. தமிழ் இசையை டெல்லிக்கு அழைத்து என்ன நடக்கிறது என்று விசாரித்துள்ளார். இது இவ்வாறு இருக்க பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்பேட் பல்கலைக் கழகம், ஆண்டுக்கு 12 இந்தியர்களை அழைத்து, அரசியல் கல்வி புகட்டி அனுப்புவது வழக்கம்.
ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ள இந்த கல்வித் திட்டத்தில் கலந்துகொள்ள, அண்ணாமலையின் பெயரைக் கொடுத்துள்ளது BJP. இதனால் ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை, அண்ணாமலை லண்டனில் தான் தங்கி இருக்கவேண்டும். இதன் காரணத்தால் தற்காலி தலைவர் ஒருவரை, அல்லது நிலந்தர தலைவர் ஒருவரை தமிழ் நாட்டிற்கு BJP கட்சி நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே கல்லி 2 மாங்காய். சூப்பர் பிளான் தான். ஒட்டு மொத்தத்தில் அண்ணாமலையில் பதவி காலி !சுவா- ஹா….. !