மிரட்டி எடுத்தாரா ” இந்தியன் 2″ தாத்தா? ஆடியன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

மிரட்டி எடுத்தாரா ” இந்தியன் 2″ தாத்தா? ஆடியன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

உலக நாயகன் கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் இந்திய திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகி படத்தின் விமர்சனங்கள் தொடர்ந்து பாசிட்டிவாக குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்து ஆடியன்ஸ் படத்தை குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதாவது, சோஷியல் மீடியாவில் முதல் சீனில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை படத்திற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் விமர்சனங்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தியன் தாத்தா கமல்ஹாசனை பாபி சிம்ஹா மற்றும் அதிரடி படையினர் கைது செய்வதற்கு முன்னதாக சோஷியல் மீடியாவில் இந்தியன் தாத்தாவுக்கு எதிராக குவியும் கமெண்ட்டுகளால் அவர் மனம் உடைந்து நடந்து செல்லும் போது “கப்பல் ஏறி போயாச்சு” பிஜிஎம் ஒலிக்கும். அப்போது தியேட்டரில் ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மற்றொரு ரசிகர், கமல்ஹாசன் என்னதான் எஃபோர்ட் போட்டு நடித்தாலும், இந்தியன் 2 போர் அடிக்கிறது என வெங்கி ரிவ்யூஸ் என்பவர் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இப்படியாக இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் நிறைந்துள்ளது. மேலும் சிலர் இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் தாறுமாறாக இருக்கிறது என கூறியுள்ளனர்.