ஹிட் கொடுத்தும் பிரயோஜனம் இல்ல…12 வருட சினிமா வாழ்க்கை வெறுத்த காயத்ரி!

ஹிட் கொடுத்தும் பிரயோஜனம் இல்ல…12 வருட சினிமா வாழ்க்கை வெறுத்த காயத்ரி!

சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்திலே தொடர்ந்து சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் மார்க்கெட் பிடிக்க முடியாமல் இன்றும் தனக்கான அடையாளம் என்று ஒரு மிகப்பெரிய அளவில் பிரபலமாகாமல் இருப்பவர்தான் நடிகை காயத்ரி ஷங்கர்.

இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்தான். இவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படங்கள் தான். ஆனாலும் ஏனோ துரதிஷ்டவசமாக இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவே இல்லை. குறிப்பாக நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த கேரக்டர் இன்றுவரை மக்களால் மறக்கவே முடியாது. தொடர்ந்து பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ,புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், விக்ரம், பகீரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பு அபார தனமான வெற்றியை குவிக்கும்.

இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து காயத்ரி மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மலையாள பக்கம் சென்று அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காதுதால் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடத்துவங்கி தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து காயத்ரி சங்கரா இது? என்ன இவ்வளவு மோசமா இறங்கிட்டாங்க என அவரை விமர்சித்து தள்ளி வருகின்றனர்.