பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியை, அன் நாட்டு அதிபர் மைக்ரான், மதிக்காமல் நடந்துகொண்ட செயல், வைரலாக பரவி வருகிறது. பல ஐரோப்பிய தலைவர்கள் அமர்ந்து இருந்த மாநாட்டில், அனைவரோடும் கை குலுக்கிய அதிபர் மைக்ரான், மோடி எழுந்து நின்றபோதும் கை கொடுக்காமல் சடுதியாக விலகிச் சென்றுள்ளார். (வீடியோ கீழே இணைப்பு)
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முதலில் பிரான்ஸ் சென்றவேளை, அதிபர் மைக்ரான் மோடியை வரவேற்றார். ஆனால் நடைபெற்ற AI மாநாட்டுக்கு பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த விரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற மாநாடுகளில் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
View this post on Instagram