பரந்து கிடக்கும் இந்த அண்டவெளியில் ரில்லியன் கணக்கான, விண் கற்கள் அலைந்து திரிகிறது. ஆனால் அவற்றில் சில ஆயிரம் விண் கற்களே பூமிக்கு அருகாமையில் சுற்றுகிறது. அப்படி இருக்க, இந்த 2024 YR4 குறியீடு கொண்ட விண் கல்லை மட்டும் நாசா, ஏன் மீண்டும் மீண்டும் அதன் வட்டப் பாதையை கணக்கிட்டுப் பார்கிறது ?
ஆம் உண்மையில் இது சற்று ஆபத்தான ஒரு விண் கல் தான். ஒரு விளையாட்டு மைதானம் அளவு பெரிய இந்தக் கல், தனது சுற்று வட்டப் பாதையை மாற்றி வருகிறது. அதன் காரணம் புவி ஈர்ப்பு விசை. ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதமும் இது பூமியைக் கடந்து செல்லும் போதும், புவியை நோக்கி ஈர்கப்படுவதால். டிசம்பர் மாதம் 22ம் திகதி, 2030ல் இது பூமிக்கு மிக நெருக்கமாக வர உள்ளது.
அந்த வேளை புவி ஈர்ப்பு விசையால் அது மேலும் ஈர்கப்பட்டால், அது பூமி மீது மோதும் அபாயம் உள்ளது. மணிக்கு 38,000 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து பூமி மீது இந்த விண் கல் மோதினால் என்ன நடக்கும் ? 100 அணு குண்டு வெடித்ததற்கு சமானாக இருக்கும். ஒரு நகரமே அழிந்து போகும். அதுவே கடலில் வந்து விழுந்தால் பெரும் சுணாமி ஏற்பட்டு அதனால் மக்கள் பலர் கொல்லப்படுவார்கள்.
ஒட்டு மொத்தத்தில் இந்த விண் கல் பூமியில் எங்கே விழுந்தாலும் ஆபத்து தான். இதனை தடுக்க வேண்டும் என்றால் 2029ம் ஆண்டு (இன்னும் 4 வருடங்களில்) ஏவுகணையை தாயார் செய்து இதன் மீது ஏவி. விண்ணில் வைத்தே வெடிக்கச் செய்ய வேண்டும். இதுவே ஒரே வழி.