Posted in

தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சி: சரோஜா தேவி காலமானார்!

தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் சுமார் 17 வருடங்கள் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரோஜா தேவி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என அந்தக் காலத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இவர் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார்களை விடவும் அதிக சம்பளம் வாங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

தற்போது, 87 வயதாகும் சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரோஜா தேவியின் மறைவுக்கு முன்னர் அவரது கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு தொலைக்காட்சி பார்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version