‘D51’- தனுஷ் சாருடன் நடிக்க ஆசை- நடிகை ராஷ்மிகா மந்தனா

‘D51’- தனுஷ் சாருடன் நடிக்க ஆசை- நடிகை ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.

இந்த நிலையில், தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி, நடித்து வரும் நிலையில், அவரது 51 வது படம் பற்றிய அப்டேட் வெளியானது.

இப்படத்தை தெலுங்கில் ஃபிட்டா, லவ் ஸ்டடோரி ஆகிய படங்களை இயக்கிய சேகர் கமுலா இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு டிஎன்எஸ் என்று தற்போது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதுகுறித்து, அவர் நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

அதில், ”தனுஷ் சார் சிறந்த நடிகர். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கும். அவருடன் பணியாற்றும் போது நிறைய கற்றுக்கொண்டு திறமையை வளார்த்துக் கொள்ளலாம். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளதால் ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.