தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.. காதலர் தின போஸ்டர்..!

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.. காதலர் தின போஸ்டர்..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில நாட்களுக்கு முன்னால் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் காதலர் தின புதிய போஸ்டரை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரி மகன் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிரார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வழக்கமான காதல் கதை என்று கேப்ஷனுடன் போஸ்டர் வெளியாகி உள்ளது