G.O.A.T என்ற தலைப்பு ரஜனிகாந்தை தாக்கும் வசனமாக அமைந்தது ? மீண்டும் விஜய் ரஜனி பனிப் போர் ஆரம்பம் ?

G.O.A.T என்ற தலைப்பு ரஜனிகாந்தை தாக்கும் வசனமாக அமைந்தது ? மீண்டும் விஜய் ரஜனி பனிப் போர் ஆரம்பம் ?

ரஜினி மற்றும் விஜய் சண்டை தொடங்குவதற்கு GOAT திரைப்படம் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே, நடிகர் விஜய் கமிட்டான படம் தளபதி 68. 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் முதன்முதலாக வெங்கட்பிரபுவுடன் கைகோர்த்துள்ளார். தளபதி 68 படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் அமெரிக்காவில் தொடங்கியது. G.O.A.அர்த்தம் Greatest Of All Times: இப்படத்திற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியானது. பசில் அல்லது பாஸ் என்பது தான் தலைப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில் படத்திற்கு GOAT என தலைப்பு வைக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் கசிந்து வருகிறது.

இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் தளத்தில் பேசிஉள்ளார். அதில். தளபதி 68 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று, பல பேர் பலவிதமா பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நேற்று வலைப்பேச்சில் படத்தின் பெயர் GOAT என்று சொல்லி இருந்தோம். கிட்டத்தட்ட 99 சதவீதம் இந்த படத்திற்கு GOAT என்று தலைப்பு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. விஜய்க்கும் இந்த தலைப்பு பிடித்துவிட்டதாகவும், டைட்டில் போஸ்டருக்கான சிஜி வேலையும் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

கிரேட்டஸ் ஆப் ஆல் டைம் விஜய் தான் என்றால், ரஜனி கிரேட் இல்லையா ? எந்த நேரத்திலும் விஜய் தான் கிரேட் என்று சொல்லக் கூடிய இந்த வசனத்தை தலைப்பாக வைத்து ரஜனியை மேலும் சூடேற்றி உள்ளார்கள். இந்தப் போர் எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *