பாட்டு ஒன்று தான் பாக்கி இந்தியன் 2 பாடல் ஒன்றிற்க்கு மட்டும் 6 கோடி செலவாமே ?

பாட்டு ஒன்று தான் பாக்கி  இந்தியன் 2 பாடல் ஒன்றிற்க்கு மட்டும் 6 கோடி செலவாமே ?

அனைவராலும் ஆவலோடு எதிர்பார்கப்படும் படம் இந்தியன் பாகம் 2. பலத்த இழுபறிக்கு மத்தியில் ஒரு மாதிரியாக படக்குழு படத்தை எடுத்து முடித்தாலும். அதில் முக்கியமான ஒரு பாடல் காட்சி மட்டும் இன்னும் பாக்கி இருப்பதாக படக் குழு தெரிவித்துள்ளது. தேர்தலை ஒட்டி கமல்ஹாசன் அவர்கள் பிரச்சார நடவடிக்கையில் உள்ளார். ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த உடனே.

பாடல் காட்சியை படமாக்குவது என்று, குழு முடிவெடுத்துள்ளதாம். இந்த பாடல் காட்சிக்கு மட்டும் சுமார் 6 தொடக்கம் 7 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. அந்த அளவு பிரம்மாண்டமாக இந்த பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளதாம். மேலும் ஜூன் மாதம் படத்தை வெளியிடுவதாக படக்குழு நேற்று முன் தினம் அறிவித்துள்ளார்கள்.

இது கமல்ஹாசன் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.