கமல் படத்தில் இருந்து வெளியேறுகிறாரா ஹெச் வினோத்?

கமல் படத்தில் இருந்து வெளியேறுகிறாரா ஹெச் வினோத்?

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங்கை பெரும்பகுதி முடித்துள்ள கமல் அடுத்து பிரபாஸின் கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இப்போது கல்கி முதல் பாகத்துக்கான தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார் கமல். இப்போது இந்தியன் 2 இறுதிகட்ட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதன் பிறகு மணிரத்னம் மற்றும் ஹெச் வினோத் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது கமல் படத்தில் இருந்து ஹெச் வினோத் வெளியேற உள்ளதாக சொல்லப்படுகிறது. ஹெச் வினோத் சொன்ன கதை கமல்ஹாசனுக்கு பிடிக்காததால் அவர் இப்போது வெளியேறி தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.