அயன் டோம் தாக்குப் பிடிக்குமா ? 200 ஏவுகணைகளை ஏவிய ஈரான் ஜெரூசலம் நகரமே அல்லோலம் !

அயன் டோம் தாக்குப் பிடிக்குமா ? 200 ஏவுகணைகளை ஏவிய ஈரான் ஜெரூசலம் நகரமே அல்லோலம் !

இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ராக்கெட் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள தூதரகம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில், 13 முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இதனை அடுத்து ஈரான் இந்த குரூஸ் மிசைல் என்று அழைக்கப்படும் குறும்தூர ஏவுகணைகளையும், தற்கொலை ஆளில்லா விமானங்களையும் அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இஸ்ரேல் நாட்டிடம் பலமான வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளது(அதனை அயன் டோம்) அதாவது இரும்பு வலையம் என்று அழைப்பார்கள். உள்ளே நூற்றுக் கணக்கான ஏவுகணைகள் நுளைந்தால் கூட அதனை, இஸ்ரேல் வான் படை பிரிவு சுட்டு வீழ்த்தும். இவ்வாறு இன்று(14) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட 200 ஏவுகணைகளில் 90% சத விகிதமானவற்றை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இருப்பினும் பல ஏவுகணைகள் ஜெரூசலத்தை தாக்கியுள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவித்துள்ளது. இதேவேளை பிரித்தானியா RAF போர் விமானங்கள், ஈரான் இஸ்ரேல் எல்லையில் பறந்து பல ஆளில்லா தற்கொலை விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.