அடுத்த தளபதி நானா? பதறிப்போய் கையெடுத்து கும்பிட்ட கவின்

அடுத்த தளபதி நானா? பதறிப்போய் கையெடுத்து கும்பிட்ட கவின்

சீரியல் நடிகராக தனது கெரியரை துவங்கியவர் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து சீரியலில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த பிளாட்பார்ம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது.

அதை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மளமளவென குவிய ஆரம்பித்தது. இதற்கு முன்னரே அவர். இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புன்னா என்ன தெரியுமா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிக் பாஸ்க்கு பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை கொடுத்தது.

இதன்மூலம் கவினின் மார்க்கெட் உச்சத்தில் உயர்ந்தது. அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார் நிலையில் தற்போது அடுத்ததாக கவின் நடிப்பில் தற்போது ஸ்டார் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் வருகிற மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிருபர்கள் அவரிடம் பல கேள்வ கேட்டனர்.

அப்போது அடுத்த தளபதி நீங்கதான் என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஐயா இது 12 வருஷம் போராட்டம் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு ஒரேடியா முடிச்சு அனுப்பி விட்டுறாதீங்க என கையெடுத்து கும்பிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.