பொம்பள கெட்டப்பில் ஷோக்கா இருக்கும் இந்த பிரபல ஹீரோ யாருன்னு தெரியுதா?

பொம்பள கெட்டப்பில் ஷோக்கா இருக்கும் இந்த பிரபல ஹீரோ யாருன்னு தெரியுதா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றார். முதன் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

நட்புனா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளராக மக்களின் மனதில் ஒரு ஆழமான இடத்தையும் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவுடன் இவர் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது. அதனை இருவருமே உறுதிப்படுத்தி கூறினார்கள். அதன் பின்னர் கவினுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. திரைப்படங்களில் நடித்து வந்த கவின் டாடாதிரைப்படத்திற்கு பிறகு மாபெரும் மார்க்கெட்டை பிடித்து விட்டார்.

அந்த படத்தில் மாபெரும் வெற்றியால் இவரின் மார்க்கெட் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிட்டது. சம்பளமும் டபுள் மடங்காக உயர்த்திவிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் அவர் தற்போது புதிய படம் ஒன்றுக்காக தனது கெட்டப்பை வித்தியாசமான முறையில் மாற்றியிருக்கிறார் ஆம், லேடி கெட்டப் போட்டுக்கொண்டு அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு கேரவனிலிருந்து வெளியிடப்பட்ட இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இது என்ன திரைப்படம் என பலரும் கேட்டு மிகுந்த ஆர்வத்தோடு இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.