பிரசாந்த் பிறந்த நாள் BMW X7 காரை அள்ளிக் கொடுத்த அப்பா 1.5 கோடி பெறுமதியான GIFT

பிரசாந்த் பிறந்த நாள் BMW X7 காரை அள்ளிக் கொடுத்த அப்பா 1.5 கோடி பெறுமதியான GIFT

நடிகர் பிரசாந்தின் பிறந்த நாள் ஏப்பிரல் 6ம் திகதி ஆகும். 1973ம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது வயது 51 ஆகிறது. மேலும் நடிகர் பிரசாந்த் தளபதி படமான கோட்டில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது வில்லன் கரக்டர் அல்ல என்பதனையும் அவர் ஏற்கனவே வெளிவுபடுத்தி இருந்தார். அவர் முதன் முதலாக 1990ம் ஆண்டு, வைகாசி பொறந்தாச்சு படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.

அப்போது அவருக்கு வயது வெறும் 17 தான். அதன் பின்னர் திருடா-திருடா, ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என்று பல படங்களில் நடித்து வெற்றி நடைபோட்டவர். குறிப்பாகச் சொல்லப் போனால் 90ஸ் கிட்ஸ்களின் டாப் ஸ்டாராகவே மாறினார்.

கடந்த 6ம் திகதி அன்று அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அப்பா தியாகராஜன் அவர்கள் பிரசாந்திற்கு ஒரு BMW காரை பரிசாக வழங்கி சப்பிரைஸ் கொடுத்துள்ளார். BMW X7 ரக கார் அது. அதன் விலை மட்டும் சுமார் 1 கோடியே 50 லட்சம் ஆகும் என்கிறார்கள்.