10 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்திய LOVE TODAY பிரதீப் ரங்கநாதன்

10 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்திய LOVE TODAY பிரதீப் ரங்கநாதன்

LOVE TODAY படம் மூலமாக உச்சகட்ட நடிகராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். முன்னர் அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அது அவருக்கு இறங்கு முகமாகவே அமைந்தது. ஆனால் LOVE TODAY சக்கை போடு போட்டதால், ஒரே படம் மூலமாக உச்சபட்ச நடிகர் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தற்போது அவர் புது படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள பிரதீப், 15 கோடி கேட்ட நிலையில். தயாரிப்பு நிறுவனம் ஒரு வழியாகப் பேசி 10 கோடிக்கு அவரை சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனைப் பொறுத்தவரை அவருக்கு என்று ஒரு இளைஞர் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது இன்றுவரை குறையாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்தும் பல படங்கள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் கதையை கேட்டு மட்டுமே அவர் நடிப்பதா இல்லையா என்று முடிவெடுத்து வருகிறார். பல படங்கள் வந்தாலும், சில படங்களை மட்டுமே தெரிவு செய்து அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்க விடையம்.