ஆத்தாடி….”கூலி” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

ஆத்தாடி….”கூலி” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

கோலிவுட்டின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக தற்போது நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்ச நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் டீசர் உடன் கூடிய டைட்டில் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது.

இதில் ரஜினியின் மேனரிசம் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இந்த டீசரை பார்த்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெறித்தனமாக அதிகரித்து விட்டது. இந்த டீசரில் கண்ணதாசனின் வரிகள் டயலாக் ஆக யூஸ் பண்ணப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காத ரஜினியை இந்த படத்தில் வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் காட்சி படுத்திருக்கிறார்.

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சூப்பர் ஸ்டார் வேற லெவலில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். கூஸ்பம்ஸ் ஆகும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாக அவரது காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கியிருக்கும் சம்பள விவரம் தற்போது இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை பேரதிர்ச்சியாக உள்ளது. ஆம், ரஜினிகாந்திற்கு ரூ 260 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.