விவாகரத்து ஆகியும் விடல… திருமண ஆடையில் விருது விழாவிற்கு வந்த சமந்தா!

விவாகரத்து ஆகியும் விடல… திருமண ஆடையில் விருது விழாவிற்கு வந்த சமந்தா!

தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை ஆன சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்த போதிலிருந்து காதலிக்க தொடங்கி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை அக்கினேனி குடும்பம் அவ்வளவு பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்திருந்தனர். இதனிடையே 4 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்து வந்தவ இவர்கள் திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அறிவித்தார்கள்.

விவாகரத்துக்கு பிறகு சமத்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திருமண உடையான வெள்ளை கௌன் மறு உருவாக்கம் செய்து சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விவாகரத்து ஆகியும் திருமண உடையில் விருது விழாவுக்கு வந்து விருது வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.