மணி ரத்தினத்திடமே கதையை அட்ஜெஸ்ட் பண்ணச் சொன்ன கமல் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுதினார் மணி !

மணி ரத்தினத்திடமே கதையை அட்ஜெஸ்ட் பண்ணச் சொன்ன கமல் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுதினார் மணி !

கமல் நடிப்பில் மற்றும் மணி ரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “தக் லைஃப்“. ஒரு முரட்டு வில்லனின் கதை. இதனை மணி ரத்தினம் அவர்கள் மிகவும் நேர்த்தியாக படமாக்கிக் கொண்டு இருந்தார். ஆனால் இதில் நடித்துவரும் கமல் ஹாசன், இப்படி போனால் நல்லது… அப்படிப் போனால் நல்லது என்று, தானே கதையை மாற்ற ஆரம்பித்துவிட்டார். சில விடையங்களை கமல் மாற்றியவேளை மணி ரத்தினம் பொறுத்துக் கொண்டாராம்.

என்ன செய்வது சுகாஷினிக்காவது பொறுத்து தானே ஆகவேண்டும் என்று நினைத்தார் போலும்.. ஆனால் போகப்.. போக கமல் ஹாசனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. கதையை முற்று முழுதாக வேறு ஒரு பாதையில் திருப்பி, தானே கதை வசனம் எழுதியது போல செயல்பட ஆரம்பித்துவிட்டாராம். இதனால் கடுப்பான மணி ரத்தினம், அந்தக் காட்சியை,  எடுப்பதை அப்படியே நிறுத்திவிட்டார். இதனால் கமலுக்கும் மணி ரத்தினத்திற்கும் சிறிய மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் என்ன தான் பெரிய நடிகராக இருந்தாலும், சில படங்களை இயக்கி இருந்தாலும். மணி ரத்தினம் போன்ற இயக்குனர் சிகரத்திடம் போய் அவரது கதையை மாற்றுங்கள், இது நல்லா இல்லை… அது நல்லா இல்லை. நான் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்,   என்று விதண்டாவாதம் பிடிக்க முடியுமா ? அப்படி என்றால் இயக்குனருக்கான மரியாதை தான் என்ன ?

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மணி , படப்பிடிப்பை பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமே … தயாரிப்பாளர் தான் பெரும் குழப்பத்தில் உள்ளார் என்கிறார்கள். இவர்கள் இடையே பஞ்சாயத்து செய்யவே நாள் போய் விடும் போல இருக்கே ?